கலிஃபோர்னியா காட்டுத் தீயில் பல ஏக்கர் நிலம் நாசம்

கலிஃபோர்னியா காட்டுத் தீயில் பல ஏக்கர் நிலம் நாசம்

1 mins read
9f42fe09-ee7e-4f4c-a734-6281f669236f
-

யாவில் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் பற்றி எரியும் காட்டுத் தீ பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. நியூயார்க் நகரத்தைவிட பெரிய பரப்பளவுப் பகுதி காட்டுத் தீயில் நாசமானதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரு இடங்களில் 230,000 ஏக்கர் நிலம் தீயில் எரிந்து சாம்பலானதாக அதிகாரிகள் கூறினர். ஒரே நாளில் 50,000 ஏக்கர் நிலம் தீயில் நாசமானதை அடுத்து இந்த காட்டுத் தீ ஐந்தாவது ஆகப் பெரிய காட்டுத் தீ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தாமஸ் என்று பெயரிடப் பட்டுள்ள இந்த காட்டுத் தீ மலைப்பகுதிகளிலும் கடலோரப் பகுதிகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் அப்பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதுவரை சுமார் 200,000 பேர் தங்கள் வீடுகளிலி ருந்து வெளியேறியுள்ளனர். கலிஃபோர்னியாவில் டிசம்பர் 4ஆம் தேதி முதல் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயில் பல கட்டடங்கள் சேதம் அடைந்தன.

கலிஃபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயில் பல வீடுகள் எரிந்து நாசமாகின. பல ஏக்கர் நிலமும் தீயில் எரிந்து சாம்பலானது. படம்: ஏஎப்பி