கோத்தா கினாபாலு: சாபா மாநிலத்தின் கோத்தா பெலூட் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 129 கிராம மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கு சுங்கை காடாமாயான் ஆற்று நீர் கரை புரண்டதால் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர் தற்சமயம் வடியத் தொடங்கியிருந்தாலும் பொதுத் தற்காப்புத்துறை அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விழிப்பு நிலையில் இருப்பதாகவும் நிலைமையை அணுக்கமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் சில சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டன. இதுவரையில் 144 அதிகாரிகளும் தொண்டூழியர்களும் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சாபாவில் வெள்ளப்பெருக்கு
1 mins read

