பெட்டாலிங் ஜெயா: மலேசிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதின் துணைவி யார் டாக்டர் சித்தி அஸ்மா, தன் கணவரைப் போன்றே தானும் சிலாங்கூர் சுல்தான் வழங்கிய விருதுகளைத் திருப்பிக் கொடுக்க முடிவு செய்ததாகவும் கணவரின் வற்புறுத்தல் இல்லாமல் தனது விருப்பத்தின் பேரில் அந்த முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளார். திரு மகாதீரின் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்றில் சித்தி அஸ்மாவின் முடிவு வெளியிடப்பட்டது. தன்னைத் தன் கணவர் இந்த விருதுகளைத் திருப்பித் தந்துவிடுமாறு வற்புறுத்தவில்லை என்றும், தனது கணவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் தாம் அவற்றைச் சிலாங்கூர் அரண்மனையிடம் திருப்பிக் கொடுக்கவிருப்பதாகவும் சித்தி ஹஸ்மா, அந்தக் காணொளி யில் தெரிவித்துக்கொண்டார்.
சித்தி அஸ்மா: மகாதீர் என்னை வற்புறுத்தவில்லை
1 mins read

