ஜப்பான் புல்லட் ரயிலில் விரிசல்; கடைசி நேரத்தில் விபத்து தவிர்க்கப்பட்டது

ஜப்பான் புல்லட் ரயிலில் விரிசல்; கடைசி நேரத்தில் விபத்து தவிர்க்கப்பட்டது

1 mins read
4c098e1d-49e9-4522-b713-41797eaa18fa
-

தோக்கியோ: ஜப்பானின் அதிவேக புல்லட் ரயிலில் விரிசல் கண்டு பிடிக்கப்பட்டது என்றும் இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது என்றும் அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜப்பானின் ரயில்வேதுறைக்கு அடையாளமாக விளங்கும் புல்லட் ரயிலில் தடம் புரளச் செய்யும் அளவுக்கு விரிசல் காணப்பட்டதாக வும் அவர்கள் கூறினர். தெற்கு ஜப்பானில் உள்ள ரயில் நிலையத்தில் புல்லட் ரயிலிலிருந்து ஏதோ எரிந்த வாடை வீசியதால் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ரயிலிலிருந்து வித்தியாசமான சத்தம் எழுந்ததாகவும் கூறப்படு கிறது. இந்நிலையில் நாகோயா ரயில் நிலையத்தில் புல்லட் ரயில் நிறுத் தப்பட்டு சோதனையிடப்பட்டது. அப்போது ஒரு ரயில் பெட்டிக்கு அடியில் உள்ள தாங்கிப் பிடிக்கும் இரும்பு சட்டத்தில் விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

புல்லட் ரயிலில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கடைசி நேரத்தில் ஊழியர்கள் கண்டுபிடித்தனர். கோப்புப் படம்: இணையம்