பந்திங்: தஞ்சோங் செப்பாட் பகுதியில் நேற்று காலை வீடு ஒன்று தீக்கிறையானதில் இரு முதியோர்கள், இரு சிறுவர்கள் உட்பட நால்வர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்த விசாரணையில் தீ விபத்தில் பலி யானவர்களின் உடலில் வெட்டுக் காயம் கண்டறியப்பட்டுள்ளது எனவும் உயிரிழந்தவர்கள் தாக் கப்பட்டோ அல்லது கொலை செய்யப்பட்டோ இருக்கலாம் என வும் காவல்துறையினர் சந்தேகிக் கின்றனர். நேற்று ஏற்பட்டதாகக் கூறப் படும் இந்த தீ விபத்துத் தொடர் பான தகவல் காலை 6.08 மணியளவில் தீயணைப்பு வீரர் களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வீரர்கள், இரு தீய ணைப்பு வண்டிகள், ஒரு அவசர ஊர்தி ஆகியன அனுப்பப்பட்டன. மீட்பு நடவடிக்கையின்போது காலை 6.43க்கு முதல் சடலத் தையும் 6.47க்கு இரண்டாவது சடலத்தையும் 6.58க்கு அடுத்த இரு சடலங்களையும் மீட்புப் பணி யாளர்கள் கண்டெடுத்தனர். இச்சம்பவத்தில் 68 வயது மூதாட்டியான லிம் மாய் ஷாக், 73 வயது முதியவரான சியா டீ நாங், மூன்று வயது சிறுவனான சியா யுவான் பின் ஆகியவர்களோடு முழுமையாக பெயர் அறியப்படாத ஒன்பது வயது சிறுவனும் உயி ரிழந்தான்.
தஞ்சோங் செப்பாட்டில் விடியற்காலை நிகழ்ந்த தீ விபத்தில் நாசமடைந்துள்ள வீடு. இதில் 2 குழந்தைகள் உட்பட நால்வர் இறந்தனர். ஆனால் உடலில் காயங்கள் இருந்ததால் நால்வரும் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். படம்: சிலாங்கூர் தீ அணைப்பு, மீட்பு துறை

