அலபாமா தேர்தலில் தோல்வி; அதிபர் டிரம்ப்புக்கு பின்னடைவு

அலபாமா தேர்தலில் தோல்வி; அதிபர் டிரம்ப்புக்கு பின்னடைவு

1 mins read
597b4bf2-b3a6-4f6c-ac7b-f521b9b5c070
-

வா‌ஷிங்டன்: அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டக் ஜோன்ஸ், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ராய் மோரை தோற்கடித்தது மட்டுமல்லாமல் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அரசியலுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஜன நாயகக் கட்சியினர் அலபாமா செனட் உறுப்பினர் பதவியை கைப்பற்றியுள்ளனர். திரு டக் ஜோன்சின் எதிர்பாராத வெற்றி அதிபர் டோனல்ட் டிரம்ப் புக்கு அவமானத்தை ஏற்படுத்தி யுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு வாக்குகள் எண்ணப்பட்டன. சுமார் 99 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்ட நிலை யில் திரு டிரம்ப் ஆதரவு பெற்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் ராய் மோர் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்தார். இந்தத் தேர்தலில் தம் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச் சாட்டுகளை எதிர்த்து ராய் மோர் போராட வேண்டியிருந்தது. பெண் ஒருவர் அவர் மீது பாலியல் புகாரை கிளப்பியிருந்தார். சில நாட்களுக்கு முன்பு தமது 14வது வயதில் தம்மிடம் ராய் மோர் பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொண்டதாக கூறியதால் தேர்தல் பிரசாரத்தில் ராய் மோருக்கு சிக்கல் அதிகரித்தது.

அலபாமா செனட் உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டக் ஜோன்ஸ். படம்: ராய்ட்டர்ஸ்