'வடகொரியாவுடன் பேச்சுநடத்த சரியான நேரம் இதுவல்ல'

'வடகொரியாவுடன் பேச்சுநடத்த சரியான நேரம் இதுவல்ல'

1 mins read

வா‌ஷிங்டன்: வடகொரியாவுடன் பேச்சு நடத்துவதற்கு இது சரியான நேரமல்ல என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வடகொரியாவின் செயலில் முன்னேற்றம் இருந்தால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சு நடத்த முடியும் என்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு மன்றத்தின் பேச்சாளர் கூறியதாக ராய்ட்டர்ஸ் தகவல் தெரிவித்தது. முன்னதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், எந்தவிதமான முன் நிபந்தனையும் இல்லாமல் வட கொரியாவுடன் பேச்சைத் தொடங்க அமெரிக்கா தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில் வடகொரியாவின் அண்மைய ஏவுகணைச் சோத னையை சுட்டிக்காட்டிய வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், அந் நாட்டுடன் பேச்சு நடத்துவதற்கு இது சரியான நேரமல்ல என்று கூறியுள்ளார். இதனால் திரு டில்லர்சனின் கூற்று குறித்து கேள்விகள் எழுந் துள்ளன. வடகொரியாவுக்கு எதிராக கடும் போக்கைப் பின்பற்றி வரும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், திரு டில்லர்சன் அவ்வாறு கூறுவதற்கு அனுமதித்தாரா என் பது பற்றி எதுவும் கூற வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.