டிரம்ப்பின் அறிவிப்பால் மத்திய கிழக்கில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட உற்சாகம் இல்லை

டிரம்ப்பின் அறிவிப்பால் மத்திய கிழக்கில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட உற்சாகம் இல்லை

1 mins read
a68d7919-2eff-43ab-934c-f2fdf45c947e
-

ஜெருசலம்: ஜெருசலத்தை இஸ்ரே லின் தலைநகராக அங்கீகரிப்ப தாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்தது முதல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன. குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் வேளையில் இஸ்ரேல் வசம் உள்ள மேற்குக்கரை பகுதியில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. வழக்கமாக கிறிஸ்மஸ் கொண்டாட்டம் களைகட்டியிருக்கும் இடங்களில் இந்த ஆண்டு கொண்டாட உற்சாகமே இல்லை என்று மேற்குக்கரை பகுதியில் வசிக்கும் கிறிஸ்துவர்கள் கூறுகின்றனர். திரு டிரம்ப்பின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீன கிறிஸ்துவர்கள் சென்ற வாரம் பெத்லஹேம் நகரில் கிறிஸ்மஸ் மரங்களை அலங்கரிக்கும் வண்ண விளக்கு களை அணைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் கிறிஸ்துவர்கள் அனைவருமே திரு டிரம்ப்பின் அந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேற்குக் கரையில் நடந்த ஆர்ப்பாட்டத் தின்போது இஸ்ரேலியப் போலிசார் தலையிட்டதைத் தொடர்ந்து இரு தரப்புகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலின்போது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை போலிசார் கைது செய்தனர். படம்: ஏஎஃப்பி