மியன்மாரில் கொல்லப்பட்ட 6,700 ரோஹிங்யா மக்கள்

மியன்மாரில் கொல்லப்பட்ட 6,700 ரோஹிங்யா மக்கள்

1 mins read
cba951d2-6fe5-4ae1-9f3e-32b21179d943
-

டாக்கா: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வன்முறை வெடித்தபோது அந்த ஒரு மாதத்தில் மட்டும் ரோஹிங்யா மக்களில் குறைந்தது 6,700 பேர் கொல்லப்பட்டதாக எம்எஸ்எஃப் எனும் ஓர் அமைப்பு கூறுகிறது. கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கும் செப்டம்பர் 24ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கொல்லப்பட்டவர்களில் 730 பேர் சிறுவர்கள் என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது. மியன்மாரிலிருந்து தப்பிச் சென்று பங்ளாதே‌ஷில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகள் பற்றிய ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்ததாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ராக்கைன் மாநிலத்தில் நடந்த சண்டையில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டதாக மியன்மார் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் எம்எஸ்எஃப் இத் தகவலை வெளியிட்டுள்ளது. ஒரே மாதத்தில் ஆயிரக்கணக் கானோர் கொல்லப்பட்டிருப்பது, மியன்மார் அதிகாரிகளால் வன்முறை பரவியதற்கு ஒரு தெளிவான அறிகுறி என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பங்ளாதேஷ் அருகே உள்ள முகாமில் தங்கியுள்ள ரோஹிங்யா அகதிகள் தண்ணீர் எடுத்துச்செல்ல காத்திருக்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்