மகாதீரின் தலைமையில் பேரணி; 100 பேரை மட்டுமே ஈர்த்தது

மகாதீரின் தலைமையில் பேரணி; 100 பேரை மட்டுமே ஈர்த்தது

1 mins read
e9147a0c-d420-498a-8420-741a839db920
-

கோலாலம்பூர்: ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியாவில் எதிர்க்கட்சி கூட்டணி நேற்று பேரணியை நடத்தியது. கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வெளியில் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரின் தலைமையில் அந்தப் பேரணி நடந்தது. வான் அஸிசா இஸ்மாயில், முகமது சபு உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் அந்தப் பேரணியில் கலந்துகொண்ட போதிலும் சுமார் 100 ஆதரவாளர்களை மட்டுமே அப்பேரணி ஈர்த்ததாகக் கூறப்பட்டது. ஒரு வாரத்திற்கு முன்பு அம்னோ கட்சியும் பாஸ் கட்சியும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த இதுபோன்ற பேரணியில் ஆதரவாளர்கள் 1,000 பேர் கலந்துகொண்டனர்.

நேற்று நடந்த பேரணியில் திரு மகாதீர் உரையாற்றினார். படம்: ஏஎஃப்பி