புட்டின்: அமெரிக்காவின் செயல் வடகொரியாவுக்கு சினம் மூட்டியது

புட்டின்: அமெரிக்காவின் செயல் வடகொரியாவுக்கு சினம் மூட்டியது

1 mins read

மாஸ்கோ: வடகொரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி னால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று ரஷ்ய அதிபர் புட்டின் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில் வடகொரி யாவின் அணுவாயுத நடவடிக்கை களை ரஷ்யா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று கூறிய திரு புட்டின், அமெரிக்காவின் கடந்த கால செயல்கள் வட கொரியாவுக்கு சினத்தை ஏற் படுத்தியதாகக் கூறினார். இத னால் அமெரிக்காவும் வட கொரியாவும் மோதல் போக்கைத் தவிர்க்க வேண்டும் என்று திரு புட்டின் கேட்டுக்கொண்டார். மாஸ்கோவில் நடந்த செய்தி யாளர்கள் மாநாட்டில் பேசிய திரு புட்டின், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் குறைய அமெரிக்காவும் வடகொரியாவும் அரசதந்திர ரீதியில் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை திரு புட்டின் பாராட்டிப் பேசினார். அமெரிக்க அதிபராக திரு டிரம்ப் பதவி ஏற்ற இந்த குறுகிய காலத்தில் அமெரிக்க சந்தை கண்டுள்ள வளர்ச்சியை திரு புட்டின் சுட்டிக் காட்டினார்.