ஆஸ்திரேலியாவில் பாலியல் கொடுமைக்கு ஆளான எண்ணற்ற சிறார்கள்

ஆஸ்திரேலியாவில் பாலியல் கொடுமைக்கு ஆளான எண்ணற்ற சிறார்கள்

1 mins read

சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான சிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்துள்ளது என்று ஆஸ்திரேலிய அரசு ஆணையம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. தேவாலயங்கள், பள்ளிக் கூடங்கள் மற்றும் விளையாட்டு மன்றங்கள் உட்பட பல நிறுவனங் களில் பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான ஆதாரங்களை அந்த ஆணையம் அம்பலப்படுத்தி யுள்ளது. ஆணையம் வெளியிட்ட இத்தகவல் ஆஸ்திரேலியர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து, இது தொடர்பாக 2,500க்கும் மேற்பட்ட குற்றச் சாட்டுகள் விசாரணைக்காக அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது. பாலியல் கொடு மைக்கு ஆளான ஆயிரக்கணக் கானோரிடம் அரசு ஆணையம் கேட்டறிந்ததில் 4000 நிறுவனங் களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சுமார் 15,000 பேர், ஆணை யத்துடன் தொடர்புகொண்டு பேசினர். பாதிக்கப்பட்டவர்களில் 800க்கும் மேற்பட்டவர்கள் தங் களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளைப் பற்றி ஆணையத் திடம் கூறினர்.