ரயில் மோதியதில் உடைந்து நொறுங்கிய பேருந்து; பள்ளிக் குழந்தைகள் நால்வர் மரணம்

ரயில் மோதியதில் உடைந்து நொறுங்கிய பேருந்து; பள்ளிக் குழந்தைகள் நால்வர் மரணம்

1 mins read
d7b7bebc-0444-4bf8-9adc-6b51983bb3af
-

தெற்கு பிரான்சின் மிலாஸ் பகுதி யில் பள்ளிக்கூட சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது ஒரு ரயில் மோதியதில் அந்தப் பேருந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் குறைந்தது நான்கு சிறுவர்கள் உயிரிழந்த தாகவும் பலர் காயம் அடைந்ததாக வும் போலிசார் கூறினர். விபத்தில் காயம் அடைந்த 20 பேரில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின் றன. அந்தப் பேருந்து அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாண வர்களை ஏற்றிச் சென்றதாவும் அந்த மாணவர்கள் அனைவரும் 13 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் கூறப் பட்டது.

சாலைக் கடப்பில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது ரயில் ஒன்று அந்த பேருந்து மீது மோதி யதாகவும் விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். அது ஒரு மோசமான சம்பவம் என்றும் தண்டவாளத்தில் இருந்து ரயில் தடம் புரண்டதுபோல் தமக்கு தோன்றியது என்றும் அவர் கூறி னார். மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் சென்றதாகவும் அப்போது அந்த ரயிலில் 30 பய ணிகள் இருந்ததாகவும் கூறப்பட் டது. தண்டவாளத்தின் குறுக்கே உள்ள சாலை ரயிலின் வருகைக் காக மூடப்பட்டு இருந்ததாக ரயில் நிறுவனமான எஸ்என்சிஎஃப் கூறி யது. இருப்பினும் அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.