இஸ்ரேலிய வீரரை கத்தியால் தாக்கிய பாலஸ்தீனர் மீது துப்பாக்கிச்சூடு

இஸ்ரேலிய வீரரை கத்தியால் தாக்கிய பாலஸ்தீனர் மீது துப்பாக்கிச்சூடு

1 mins read
40331632-33e1-4bbc-aad0-86d16e460139
-

ரமல்லா: ஜெருசலத்தை இஸ்ரே லின் தலைநகராக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அங்கீ கரித்தது முதல் காசா-இஸ்ரேல் எல்லைப் பகுதியில் இஸ்ரேலியர் களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் அதிகரித் துள்ளது. இந்நிலையில் ரமல்லா நகருக்கு அருகே இஸ்ரேலிய வீரர் ஒருவரை பாலஸ்தீனர் ஒருவர் கத்தியால் தாக்கியதைத் தொடர்ந்து அந்த பாலஸ்தீனர் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத் தினர். அந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்துள்ள அந்த பாலஸ்தீனர் ஒரு பயங்கரவாத சந்தேக நபர் என்றும் அவன் தற்கொலை இடுப்பு வாரை அணிந்திருந்ததாகவும் இஸ்ரே லிய வீரர்கள் கூறினர். இஸ்ரேல் தொடர்பில் திரு டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் மூண்ட கலவரத்தில் நால்வர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலிய வீரரை கத்தியால் தாக்கிய பாலஸ்தீனரை சுற்றி வளைத்த இஸ்ரேலிய வீரர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியல் அந்த ஆடவர் படுகாயம் அடைந்தார். படம்: ஏஎஃப்பி