வாஷிங்டன்: வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாக அந்நாடு அதன் மிரட்டலை அவசியம் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார். ஐநா பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் உரையாற்றிய திரு டில்லர்சன், பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கான சிறந்த வழியை அந்நாடு கண்டறிய வேண்டும் என்று கூறினார். திரு டில்லர்சனின் இக்கூற்று மூன்று நாட்களுக்கு முன்பு அவர் கூறியதற்கு மாறாக உள்ளது. வடகொரியாவுடன் முன் நிபந்தனை இல்லாமல் பேச்சு நடத்துவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக திரு டில்லர் சன் கடந்த செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார்.
மிரட்டலை நிறுத்தினால் மட்டுமே வடகொரியாவுடன் பேச்சு
1 mins read

