நோம்பென்: அமெரிக்க, ஐரோப் பிய நாடுகளில் உள்ள கம்போடி யத் தலைவர்களின் சொத்துகளை முடக்கும்படி ஐரோப்பிய நாடுக- ளை யும் அமெரிக்காவையும் அந் நாட்டுப் பிரதமர் ஹுன் சென் கேட்டுக் கொண்டுள்ளார். கம்போடியாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்- ளது. அதனையடுத்து அந்நாட் டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் செல்வந்தர்கள் வெளிநாட்- டில் வைத்துள்ள சொத்துகளை முடக்குவதற்கு பிரதமர் ஹுன் சென் கடுமையான நடவடிக்-கையை முடுக்கி விட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கு நிதியளிக்க அமெ- ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடைவிதித்துள்ளன. அமெரிக்கா சற்று கூடுதலாக கம்போடியாவின் தலைவர்கள் சிலருக்கு விசா வழங் குவதை நிறுத்தி வைத்துள் ளது. இந்த நடவடிக்கையை வர- வேற்ற ஹுன் சென், அந்த நாடு கள் கம்போடியத் தலைவர்கள் அங்கு வைத்திருக்கும் சொத்து- களை முடக்குவதையும் ஊக்கு விப்பதாகக் கூறினார்.

