சான்டியாகோ: இடைவிடாது பெய்த பேய்மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் தெற்கு சிலியில் குறைந்தது ஐவர் மாண்டனர்; ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. சுற்றுலாத் தலமாகப் பெயர்பெற்ற வில்லா சான்ட லூசியா எனும் கிராமம் முழுவதுமே நிலச்சரிவால் பாதிப்படைந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வூரைச் சேர்ந்த பதினைந்து பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது. சிலி அதிபர் மிஷெல் பேச்சலட் அந்தப் பகுதியில் அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ளார். ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றித் தவித்து வருவதுடன் நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்தும் முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளனர்.
கிராமத்தையே சிதைத்த நிலச்சரிவு
1 mins read

