கலிஃபோர்னியா: மீண்டும் காட்டுத் தீ;

கலிஃபோர்னியா: மீண்டும் காட்டுத் தீ;

1 mins read
bcfc76e9-b9d2-459b-afe6-fa7a6ec602c8
-

கலிஃபோர்னியா: சான்ட பார்பரா கவுன்டி பகுதியில் மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் அங் கிருந்து வெளியேறும்படி அவ்வட் டாரவாசிகளுக்கு கலிஃபோர்னிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். காற்று வடதிசை நோக்கி வீசுவதால் 'தாமஸ்' எனப் பெய ரிடப்பட்டுள்ள அந்தக் காட்டுத் தீ பசிபிக் கடலோரத்தை நோக்கிப் பரவக்கூடும் என்று வானியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். மாநிலத்தின் 3வது ஆகப் பெரிய காட்டுத் தீயாக 'தாமஸ்' கருதப்படுகிறது. கடந்த 4ஆம் தேதி தொடங்கிய இந்தத் தீக்கு இதுவரை சுமார் 1,000 சதுர கி.மீ. காடுகள் இரையாகிவிட்டன.

இந்தத் தீயின் காரணமாக இதுவரை இரண்டு பேர் உயிரிழந் ததாகக் கூறப்படுகிறது. அவர் களில் தீச் சாதனப் பொறியாளரான கோரி ஐவர்சனும் ஒருவர். மாலை நேரத்தில் பலத்த காற்று வீசுவதாலும் காற்றின் ஈரப்பதம் குறைவாக இருப்பதாலும் தீயின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மோன்டி சிட்டோ, சம்மர்லேண்ட் போன்ற மலைப் பகுதிகள் உட்பட சான்ட பார்பராவில் வசித்துவரும் பல சமூகத்தினர் அங்கிருந்து கட்டா யமாக வெளியேறும்படி உத்தர விடப்பட்டுள்ளது.

மோன்டிசிட்டோ மலைப்பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ. படம்: ராய்ட்டர்ஸ்