பாகிஸ்தான் தேவாலயத்தில் தாக்குதல்; எண்மர் மரணம்

பாகிஸ்தான் தேவாலயத்தில் தாக்குதல்; எண்மர் மரணம்

1 mins read
ade4a3c8-a8ff-4725-b853-a10af4b3b4da
-

குவெட்டா: பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் நேற்றுப் பிற்பகல் பயங்கரவாதிகள் நடத்திய துப் பாக்கிச்சூட்டிலும் தற்கொலைத் தாக்குதலிலும் குறைந்தது எட்டு பேர் மரணமடைந்தனர்; 45 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனை வரும் அங்குள்ள அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டனர். சம்பவ இடத்திலேயே நால்வர் மாண்டதாகவும் மற்றவர் கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 'பெத்தேல் மெமோரியல் மெத் தடிஸ்ட் சர்ச்' என்ற அந்தத் தேவாலயத்தில் நேற்று பிரார்த் தனை நடந்துகொண்டிருந்த போது பயங்கரவாதிகள் இருவர் தாக்குதல் நடத்தினர். அப்போது தேவாலயத்தில் சுமார் 400 பேர் இருந்ததாக போலிஸ் அதிகாரி அன்சாரி கூறினார்.

பயங்கரவாதத் தாக்குதலையடுத்து தேவாலயத்தில் இருந்து தமது மகளுடன் தப்பி வெளியேறும் பெண். படம்: ஏஎஃப்பி