வடகொரியாவுக்குப் 'பொருளியல் உளவு' பார்த்ததாக ஆடவர் கைது

வடகொரியாவுக்குப் 'பொருளியல் உளவு' பார்த்ததாக ஆடவர் கைது

1 mins read

மெல்பர்ன்: வடகொரியாவுக்குப் பொருளியல் உளவாளியாகச் செயல்பட்டதாகக் கூறி ஆடவர் ஒருவரை ஆஸ்திரேலிய போலிசார் கைது செய்துள்ளனர். கொரிய வம்சாவளியைச் சேர்ந்த சான் ஹன் சோய் என்ற அந்த 59 வயது ஆடவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்தி ரேலியாவில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. கள்ளச்சந்தையில் ஏவுகணை பாகங்களையும் நிலக்கரியையும் விற்க வடகொரியா சார்பில் அவர் செயல்பட்டு வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பேரழிவு ஆயு தங்கள் (ஆயுதப் பெருக்கத் தடை) சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட முதல் நபர் சான்தான் என்பது குறிப்பிடத் தக்கது. குற்றச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். "இது முக்கியமான கைது நட வடிக்கை. அவர் மீது சுமத்தப் பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கடுமை யானவை. வடகொரியா மீதான பொருளியல் தடைகளை எல்லா நாடுகளும் அமல்படுத்தவேண் டியது அவசியம்," என்று ஆஸ்தி ரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் செய்தியாளர்களிடம் கூறினார்.