ஹாங்காங்கில் 12 வயது சிறுமி கொலை: தாயார் கைது

ஹாங்காங்கில் 12 வயது சிறுமி கொலை: தாயார் கைது

1 mins read
0cb3783e-7696-4a0f-a580-9458bd6e7bc5
-

ஹாங்காங்: ஹாங்காங்கில் நடந்த படுகொலைச் சம்பவம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது. ஹாங்காங்கில் உள்ள ஒரு வீட்டில் 12 வயதுச் சிறுமியின் உடல் பாகங்கள் கண்டுபிடிக் கப்பட்டதைத் தொடர்ந்து அக்கொலை தொடர்பில் சந் தேகத்தின் பேரில் அச்சிறுமி யின் தாயாரை போலிசார் கைது செய்துள்ளனர். ஹாங்காங்கின் மோங் கோக் வட்டாரத்தில் உள்ள அடுக்கு மாடி வீடு ஒன்றில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சிறுமியின் உடல் பாகங்களை போலிசார் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து அச் சிறுமியின் தாயாரை போலிசார் கைது செய்து விசாரித்து வருவதாக தகவல்கள் கூறு கின்றன. காவ் எனும் புனைப் பெயர் கொண்ட 37 வயதான அந்த மாது இரு வழி அனுமதி பெற்றவர் என்றும் அவரது மகளான அச்சிறுமி ஹாங்காங் அடையாள அட்டை வைத் திருந்ததாகவும் அச்சிறுமி அங்கு படித்து வந்ததாகவும் கூறப்பட்டது.

ஹாங்காங்கில் 12 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அச்சிறுமியின் தாயாரை போலிசார் கைது செய்தனர். படம்: ஆப்பிள் டெய்லி