அட்லாண்டா விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு

அட்லாண்டா விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு

1 mins read

அட்லாண்டா: அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள ஹார்ட்ஸ்ஃபீல்டு- ஜாக்சன் அனைத்துலக விமான நிலையம் உலகிலேயே ஆக பரபரப்புமிக்க விமான நிலையம் ஆகும். ஒவ்வொரு நாளும் இங்கு கிட்டத்தட்ட 2,500 விமானங்கள் சேவையாற்றுகின்றன. சுமார் 250,000 பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்துகின் றனர். இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை அந்த விமான நிலையத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் தவிக்க நேர்ந்தது. மின்தடை காரணமாக அந்த விமான நிலையம் இருளில் மூழ்கியது. கிட்டத்தட்ட 11 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் அந்த விமான நிலையம் ஸ்தம்பித்த தாகக் கூறப்பட்டது.