ரஷ்யாவில் சதித்திட்டத்தை முறியடிக்க அமெரிக்க உளவுத்துறை உதவியது

ரஷ்யாவில் சதித்திட்டத்தை முறியடிக்க அமெரிக்க உளவுத்துறை உதவியது

1 mins read

மாஸ்கோ: ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள தேவாலயம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகளின் சதியை ரஷ்ய அதிகாரிகள் முறியடித்துள்ளனர். அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் கொடுத்த தகவலின் உதவியால் அந்த சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள போதிலும் இரு நாடுகளின் ஒத்துழைப்பால் சதித்திட்டத்தை முறியடிக்க முடிந்தது என்று அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய ரஷ்ய அதிபர் புட்டின், அமெரிக்காவின் உதவிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டதாக வெள்ளை மாளிகை மற்றும் கிரம்ளின் வட்டாரங்கள் கூறின. ரஷ்யாவில் சனிக்கிழமையன்று தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது என்று ரஷ்யா தெரிவித்தது. தாக்குதலுக்கு முன்பே சந்தேக நபர்கள் பிடிபட்டதால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை கூறியது.