புயலுக்குப் பின் தேடும் பணி பிலிப்பீன்சில் தீவிரம்

புயலுக்குப் பின் தேடும் பணி பிலிப்பீன்சில் தீவிரம்

1 mins read
dcb4027f-6ee7-4d7c-be3d-7e497c3701e2
-

மணிலா: பிலிப்பீன்சின் கிழக்குப் பகுதியில் சென்ற வார இறுதியில் வீசிய பலத்த புயல்காற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதி கரித்துள்ள நிலையில் இன்னும் 30க்கும் மேற்பட்டோரைக் காண வில்லை என்று அதிகாரிகள் கூறினர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட மலைப்பகுதியில் தொண்டூழியர் களுடன் சேர்ந்து போலிசாரும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்க கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. வெறும் கைகளைப் பயன் படுத்தியும் மண்வெட்டி போன்ற சாதனங்களைப் பயன்படுத்தியும் தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ள வேளையில் காணாமற்போனவர் களை உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாக மாநில பேரிடர் நிர்வாகக் குழுவின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

புயலிலும் நிலச்சரிவிலும் சிக்கி காணாமற்போனவர்களைத் தேடும் பணியில் தொண்டூழியர்களும் போலிசாரும் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி