சீனாவிலிருந்து சுற்றுப் பயணி களை ஈர்க்கும் ஒரு முயற்சியாக 50 சீன ஜோடிகளுக்கு இலங் கையில் திருமணம் நடத்திவைக் கப்பட்டது. தலைநகர் கொழும்பில் நகரமன்றத் திடலில் இலங்கை மக்களின் சம்பிரதாயப்படி நடை பெற்ற இந்த மாபெரும் திருமண விழாவுக்கு இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. மணம் முடித்த தம்பதியருக்கு இலங்கை அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ரஜித சேனரத்ன, ஜான் அமரதுங்க ஆகியோர் திரு மணச் சான்றிதழ்களை வழங் கினர். இந்தத் திருமண நிகழ்வு இலங்கை=சீன உறவை மேலும் பலப்படுத்த உதவும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறினார். சீன உடையிலும் மேற்கத்திய பாணி உடையிலும் மணமக்கள் இருந்தபோதிலும் சில ஜோடிகள் இலங்கை மத்திய வட்டார மலைப் பாங்கான பகுதி மக்களின் பாரம் பரிய உடைகளை அணிந்திருந் ததாக ராய்ட்டர்ஸ் கூறியது.
50 சீன ஜோடிகளுக்கு இலங்கை சம்பிரதாயப்படி திருமணம்
1 mins read
-

