பாலியில் போதைப்பொருள் கடத்தல்; ஆஸ்திரேலியர் உட்பட மூவர் கைது

பாலியில் போதைப்பொருள் கடத்தல்; ஆஸ்திரேலியர் உட்பட மூவர் கைது

1 mins read

டென்பசார்: பாலியில் உள்ள டென்பசார் விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்திய மூன்று பேர் கைது செய்யப் பட்டனர். ஓர் ஆஸ்திரேலியர், ஓர் அமெரிக்கர், ஒரு மலேசியர் ஆகிய மூவரும் தனித்தனி சம்பவங்களில் இந்தோனீசிய சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரான 35 வயது ஆஸ்திரேலியர் இம்மாதம் 4ஆம் தேதி பாலி விமான நிலையத்தில் கைது செய்யப் பட்டார். பேங்காக்கிலிருந்து வந்த விமானத்தில் அவர் வந்ததாக இந்தோனீசிய அதிகாரிகள் கூறினர். அதிகாரிகள் அவரை சோதனை செய்தபோது எக்ஸ்டசி மாத்திரைகள் உட்பட 20 கிராம் போதைப்பொருள் அவர் வைத் திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மரண தண்டனையை எதிர்நோக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.