அர்ஜெண்டினாவில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அர்ஜெண்டினாவில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

1 mins read
c2575b7a-7696-4431-a1d9-1f5f5952ed9c
-

பியூனோஸ் அய்ரிஸ்: அர்ஜெண் டினாவில் அதிபர் மவ்ரிசியோ மெக்ரி தலைமையிலான வலதுசாரி அரசாங்கம், ஓய்வூதிய சட்டத்தில் சில சீர்திருத்தங்களை கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் அரசாங்கத்தின் அந்த உத்தேசத் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அங்கு தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. ஒரு வாரத்தில் இரண்டாவது நாளாக நேற்று அங்கு நடந்த ஆர்ப்பாட்டங்கள் வன்முறைப் போராட்டமாக மாறியது. ஆர்ப் பாட்டக்காரர்களை போலிசார் கலைக்க முயன்றபோது அவர்கள் மீது கற்களையும் போத்தல் களையும் போராட்டக்காரர்கள் வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அரசாங்கத்தின் உத்தேசத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு படப்போவதாகப் போராட்டக் காரர்கள் சூளுரைத்துள்ளனர்.

அர்ஜெண்டினாவில் அரசாங்கம் உத்தேசித்துள்ள ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பலர் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டங்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி