உலகளாவிய கணினி ஊடுருவலுக்கு வடகொரியாவே காரணம்

உலகளாவிய கணினி ஊடுருவலுக்கு வடகொரியாவே காரணம்

1 mins read

வா‌ஷிங்டன்: இந்த ஆண்டு தொடக்கத்தில் 150 நாடுகளில் 300,000க்கும் மேற்பட்ட கணினிகள் ஊடுருவப்பட்டதற்கு வடகொரியாவே காரணம் என்று அமெரிக்க நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. அத்தகைய ஊடுருவலால் பல பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் உதவியாளரான தாமஸ் போஸ்செட், வால் ஸ்திரீட் ஜெர்னல் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். கணினி ஊடுருவல் தொடர்பில் வடகொரியாவை அதிகாரபூர்வமாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருப்பது இதுவே முதல் தடவை. பல ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதாக அதிபரின் ஆலோசகரான போஸ்செட் கூறியுள்ளார். கணினி ஊடுருவலுக்கு வடகொரியாவே காரணம் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் கடந்த நவம்பர் மாதம் குற்றம் சாட்டியிருந்தது.