மணிலா: பிலிப்பீன்ஸ் கடற்படை தளபதி நேற்று அதிரடியாக பதவி யிலிருந்து நீக்கப்பட்டார். மேலிட உத்தரவுகளை மதிக் காமல் இரண்டு போர்க் கப்பல் களுக்கான 15.5 பில்லியன் பெசோ திட்டத்துக்கு அவர் இடையூறுகளை விளைவித்ததாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை அன்று வைஸ் அட்மிரல் ரொனால்ட் ஜோசப் மெர்காடோ பதவியி லிருந்து அகற்றப்பட்டார். இதன் தொடர்பில் செய்தி யாளர்களிடம் பேசிய தற்காப்பு அமைச்சர் டெல்ஃபின் லோரன் சானா, தென்கொரியாவின் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு வழங் கப்பட்ட போர்க்கப்பல் திட்டத்தை சரியான முறையில் செயல்படுத் தாததால் மெர்காடோவை நீக்க அதிபர் டுட்டர்ட்டேயிடமிருந்து அனுமதி பெறப்பட்டது என்றார். "அவரை பதவியிலிருந்து நீக்கியாக வேண்டும். "திட்டத்தை சீர்குலைத்து விட்டார்," என்றும் அவர் குறிப்பிட் டார். இந்நிலையில் திரு லோரன் சானா தற்காலிகமாக மெர்கா டோவின் தளபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
கடற்படை தளபதி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட வைஸ் அட்மிரல் ரொனால்ட் ஜோசப் மெர்காடோ (வலம்). படம்: ஏஎஃப்பி

