சரவாக் மாநிலத்தில் திடீர் வெள்ளம்

சரவாக் மாநிலத்தில் திடீர் வெள்ளம்

1 mins read

மிரி: சரவாக் மாநிலத்தில் செவ்வாய்க் கிழமை இரவு தொடங்கிய கடும் மழை மறுநாள் விடியற்காலை வரை தொடர்ந்தது. இதனால் வடக்கு சரவாக் கடலோரப் பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. மேலும் ஆற்றோரமுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் மிரி, லிம்பாங் வட்டாரங்களிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. கோலா பாராமில் உள்ள மீன் பிடி கிராமங்களில் பல படகுகள் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டன. லிம்பாங்கில் மட்டும் குறைந்தது ஏழு கிராமங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக பல குடும்பங்கள் தங்களுடைய இருப்பிடங்களிலிருந்து வெளியேறி மேடான இடங்களுக்குச் சென்றனர் என்று தீயணைப்புத் துறையினர் கூறினர்.