கோலாலம்பூர்: ஜோகூர் பெட்ரோல் நிலையம் அருகே பலர் முன்னி லையில் சீனர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்களில் இரு வரை போலிசார் கைது செய்துள் ளனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் பெண். சம்பவம் நடைபெற்ற மூன்று நாட்களுக்குப் பிறகு நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இருவரும் கைதாயினர். "காவல்துறை சிறப்புப் படை யினர் 19 வயது சீன இளையரையும் 22 வயது சீனப் பெண்ணையும் விசாரணைக்காகக் கைது செய் துள்ளதை உறுதிபடுத்த முடியும்," என்று ஜோகூர் போலிஸ் தலைவர் கலில் காதர் முஹமட் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்தார்.
ஆனால் சம்பவம் தொடர்பில் வெளியான போலியான கட்டுக் கதைகளால் பொதுமக்களிடம் கவலை அதிகரித்து காவல் துறையின் விசாரணைகளுக்கும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன என்றார் அவர். கொடூரமான முறையில் கொல் லப்பட்டவரின் பெயர் ஆ சியூ என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்தக் கொலை சம் பவத்தால் மலேசியாவில் மட்டுமல் லாமல் சிங்கப்பூரிலும் அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டன. இதற்கு காரணம், சிங்கப்பூரர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெட்ரோல் நிலையம் அருகே இந்தப்பயங்கரம் நடந்துள்ளது. இது, ஒரு திட்டமிடப்பட்ட படு கொலை என்று அதிகாரிகள் சந் தேகிக்கின்றனர். கொல்லப்பட்டவர் முதலில் கத்தியால் குத்தப்பட்டார். பின்னர் இருமுறை அவர் மீது பிஎம்டபிள்யூ கார் ஏற்றப்பட்டது.
தாமான் பெலாங்கி பெட்ரோல் நிலையம் அருகே தனது கணவர் கொல்லப்பட்ட இடத்தில் இரண்டு புத்த பிக்குகளுடன் வியட்நாமிய மனைவி பிரார்த்தனை செய்தார். படம்: த ஸ்டார் ஆன்லைன்

