சோல்: 2018ஆம் ஆண்டின் குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியா நடந்துகொள்வதைப் பொறுத்து அமெரிக்காவுடனான கூட்டு ராணுவப் பயற்சி ஒத்தி வைக்கப்படும் என்று தென் கொரியா நேற்று அறிவித்தது. இந்த ராணுவப் பயிற்சிக்கு சீனாவும் எதிர்ப்பு தெரிவித்து வரு கிறது. இதனால் தென்கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த சீனக்குழுவின் சுற்றுப்பயணமும் ரத்து செய்யப்பட்டது. தென்கொரியாவில் பிப்ரவரி மாதம் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு சீனாவுடனும் வடகொரி யாவுடனும் உறவைச் சீர்செய்ய தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் விரும்பு கிறார். இதையொட்டி கூட்டு ராணுவப் பயிற்சியை ஒத்திவைக்கவும் அவர் முன்வந்துள்ளார். இந்நிலையில் தென்கொரியா- அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற் சியைத் தமக்கு எதிரான போர் என வடகொரியா கருதுகிறது. மேலும் இப்பயிற்சியில் 'தாட்' எனும் ஏவுகணை எதிர்ப்பு முறை பயன்படுத்தப்படுவதால் சீனாவும் எரிச்சல் அடைந்துள்ளது.
வடகொரியாவைப் பொறுத்து ராணுவப் பயிற்சி அமையும்
1 mins read

