மணிலா: பிலிப்பீன்ஸ் கடல் பகுதியில் ஒரு படகு மூழ்கியதில் நால்வர் உயிரிழந்ததாகவும் 50 பேரைக் காணவில்லை என்றும் கடலோரக் காவல் படையினர் கூறியுள்ளனர். சுமார் 251 பேரை ஏற்றிச் சென்ற படகு, கொந்தளிப்பு மிக்க கடல் அலையில சிக்கி விபத்துக்கு உள்ளானதாக கடலோர காவல் படைப் பேச்சாளர் ஒருவர் கூறி னார். போலில்லோ தீவுக்கு அருகே அப்படகு மூழ்கியதைத் தொடர்ந்து உள்ளூர் படகுகள் ஏற்கெனவே பயணிகளில் சிலரைக் காப்பாற் றிய நிலையில் மீட்புப் படகுகளும் ஹெலிகாப்டர் களும் அப்பகுதிக்கு அனுப்பப் பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். படகுப் பயணிகளில் எவ்வளவு பேர் காப்பாற்றப்பட்டனர்; எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரம் இன்னும் தெரிய வில்லை. அப்படகில் ஏற்பட்ட பெரும் துவாரம் காரணமாக அப்படகு கடலில் மூழ்கியிருக்கலாம் என்று ஆரம்பத் தகவல்கள் உணர்த்துவ தாக அவசர சேவைப் பிரிவின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பிலிப்பீன்சில் படகு மூழ்கியதில் நால்வர் பலி
1 mins read

