மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் கூட்டத்தினர் மீது காரை மோதி 19 பேரை காயப்படுத்திய ஓட்டுநர் ஒரு மனநோயாளி என்பது தெரியவந்துள்ளதாக போலிசார் கூறியுள்ள நிலையில் அத்தாக்குதல் அதிர்ச்சி தருவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். ஆனாலும் அத்தாக்குதல் பயங்கரவாதம் தொடர்பிலானது அல்ல என்றும் இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை என்றும் திரு டர்ன்புல் கூறினார். மெல்பர்ன் நகரில் கூட்டத்தினர் மீது காரை மோதி பலரைக் காயப்படுத்திய 32 வயது ஓட்டுநர் ஆப்கான் வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர் என்றும் அகதிகள் திட்டத்தின்கீழ் அவர் ஆஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்ததாகவும் கூறப்பட்டது. அத்தாக்குதல் தொடர்பில் தொடர்ந்து புலன்விசாரணை நடைபெறுவதாக திரு டர்ன்புல் அறிவித்தார். தாக்குதலில் காயம் அடைந்தவர்களில் 9 பேர் வெளிநாட்டவர்கள் என்று பிரதமர் கூறினார்.
'ஆஸ்திரேலியத் தாக்குதலில் பயங்கரவாதத் தொடர்பில்லை'
1 mins read

