கோக்ஸ் பசார்: பங்ளாதேஷில் உள்ள அகதிகள் முகாம்களுக்குத் தஞ்சம் நாடி வந்துள்ள ரோஹிங்ய பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் அவர்களிடம் பாதுகாப்பு அலாரம் கொடுக்கப்படுகிறது. ஆபத்து நெருங்கினால் அந்தப் பெண்கள் பாதுகாப்பு அலாரத்தை இயங்கச் செய்யலாம். அலாரம் இயக்கப்படும்போது அதிலிருந்து 'கீச்' என்ற சத்தம் எழும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மியன்மாரில் தங்கள் இனத்துக்கு எதிராக வெடித்துள்ள வன்முறையிலிருந்து தப்பிக்க பங்ளாதேஷ் செல்லும் ரோஹிங்ய பெண்கள் பாலியல் தொழில் நடத்துபவர்களிடமும் மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்களிடமும் சிக்கித் தவிக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உதவி அமைப்புகள் கவலை தெரி வித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரோஹிங்யப் பெண்களுக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பு அலாரம். படம்: ஏஎஃப்பி

