ரியாத்: அண்மையில் ஊழல் தொடர்பாக சவூதி அரேபியாவில் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் உலகப் பணக்காரர்களில் ஒருவரான இளவரசர் அல் வாலித் பின் தலாலும் ஒருவர். இந்நிலையில், இளவரசர் அல் வாலித் அபராதத் தொகையாக $8.06 பில்லியன் செலுத்தினால் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இந்தத் தகவலை வாஷிங்டன் ஸ்திரீட் ஜர்னல் வெளியிட்டுள்ளது. கைதான பலர் அபராதத் தொகையைச் செலுத்திய பிறகு விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் தம்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று இளவரசர் அல் வாலித் தெரிவித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் வாஷிங்டன் ஸ்திரீட் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
சவூதி இளவரசருக்கு $8.06 பி. அபராதம்
1 mins read

