பிலிப்பீன்ஸ் கடைத்தொகுதி தீக்கிரையானது; 37 பேர் மரணம்

பிலிப்பீன்ஸ் கடைத்தொகுதி தீக்கிரையானது; 37 பேர் மரணம்

1 mins read
bea523ff-a1ee-43d7-a9b5-d4be52f64ff9
-

தெற்கு பிலிப்பீன்சின் டாவோ நகரில் உள்ள கடைத்தொகுதி ஒன்று தீக்கிரையானதில் 37 பேர் பலியாகியிருக்கலாம் என்று சொல் லப்படுகிறது. தீப்பற்றிய கடைத்தொகுதியில் இருந்த 37 பேர் உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்று அங்கு இருந்த தீ பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி கூறினார். இந்தத் தகவலை டாவோ நகரின் துணை மேயரும் பிலிப்பீன்ஸ் அதிபரின் மகனுமான பாலோ டுட்டர்டே தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 'என்சிசிசி மால்' எனும் கடைத்தொகுதியில் நேற்று முன் தினம் காலை தீப்பற்றியது. அந்த கடைத்தொகுதியின் மேல் மாடியில் உள்ள அலுவலகம் ஒன்றிலும் பலர் சிக்கிக்கொண்டனர் என அந்த மாவட்ட போலிஸ் அதிகாரி திரு ரால்ஃப் கெனோய் கூறினார். நேற்று அதிகாலை வரை கிட்டத்தட்ட 24 மணி நேரம் அந்த கடைத்தொகுதியில் தீ எரிந்து கொண்டிருந்ததாகவும் திரு கெனோய் கூறினார். "துணிகள், மரத் தளவாடங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவை இருந்த மூன்றாவது மாடியில் முதலில் பற்றிய தீ, பின்னர் மளமளவென்று பரவியது. தீயை அணைக்க வெகுநேரம் ஆனது," என்று திரு கெனோய் கூறினார்.