புயலில் சிக்கி பிலிப்பீன்சில் குறைந்தது 200 பேர் மரணம்

புயலில் சிக்கி பிலிப்பீன்சில் குறைந்தது 200 பேர் மரணம்

1 mins read

மணிலா: தெற்கு பிலிப்பீன்ஸ் பகுதியில் வீசிய பலத்த புயல்காற்றில் சிக்கி சுமார் 200 பேர் உயிரிழந்ததாகவும் இன்னும் பலரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெம்பின் என்றழைக்கப்படும் புயல் காரணமாக மிண்டானோ தீவில் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டன. இங்குள்ள இரு நகரங்கள் புயலால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன. இங்கு பல வீடுகள் மண்ணில் புதைந்ததாகக் கூறப்படுகிறது. மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல்காற்று தற்போது மேற்கு நோக்கி வீசுவதாக அதிகாரிகள் கூறியுள் ளனர். ஆறுகளில் நீர் நிரம்பி வழிவதாகவும் பல வீடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப் பட்டதாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ஒரு கிராமம் முழுமையாக திடீர் வெள்ளப்பெருக்கில் மூழ்கிய தாக அந்த அதிகாரி கூறினார். மண்ணில் புதைந்த கிராம மக்களைக் காப்பாற்ற தொண்டூழி யர்களும் மீட்புக் குழுவினரும் தீவிரமாக மீட்புப் பணிகளில் ஈடு பட்டுள்ளனர்.