வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் தாய்லாந்து தலைமையில் பல நாடுகள் சேர்ந்து அடுத்த ஆண்டு மேற்கொள்ளவிருக்கும் ராணுவப் பயிற்சியில் கலந்துகொள்ளுமாறு மியன்மாருக்கு தாய்லாந்து அழைப்பு விடுத்துள்ளது. இத்தகவலை அமெரிக்க தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் கிறிஸ்டோபர் லோகன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். 'கோப்ரா கோல்டு' எனும் ராணுவப் பயிற்சி ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் பயிற்சியாகும். பயிற்சியின்போது மேற்கொள்ளப்படும் மனிதாபிமான உதவிப் பணிகள் மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளை கவனித்துக்கொள்வதற்காக மியன்மாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரோஹிங்யா மக்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் ஒடுக்குமுறையை பின்பற்றுவதாக குற்றஞ்சாட்டப்படும் வேளையில் ரோஹிங்யா விவகாரம் தனிப்பட்ட விஷயம் என்று தாய்லாந்து தெரிவித்துள்ளது.
ராணுவ கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க மியன்மாருக்கு அழைப்பு
1 mins read

