வடகொரிய அதிகாரிகள்: ஐநா புதிய தடைகள் போர் நடவடிக்கையாகும்

வடகொரிய அதிகாரிகள்: ஐநா புதிய தடைகள் போர் நடவடிக்கையாகும்

1 mins read

சோல்: வடகொரியா மீது ஐநா விதித்துள்ள புதிய தடைகள் போர் நடவடிக்கை என்று வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சினம் அடையச் செய்வதற்கான ஒரே வழி வடகொரியாவின் அணுவாயுத ஆற்றலை வலுப்படுத்துவதே என்று வடகொரிய வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரி வித்திருப்பதாக வடகொரிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள் ளது. வடகொரியா மீது ஆகக் கடைசியாக ஐநா விதித்த புதிய தடைகள் அந்நாட்டின் பொருளியலுக்கு முழுமையாக விதிக் கப்பட்ட தடைகள் என்று வடகொரிய அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். அதற்கான அனைத்து விளைவுகளுக்கும், புதிய தடை களுக்கு ஆதரவு அளித்த நாடுகளே பொறுப்பேற்க வேண்டி வரும் என்றும் வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்கா தொடர்ந்து வடகொரியாவுக்கு எதிராக கடுமையான தடைகளை விதித்து வருவதாகவும் வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.