செயற்கைக்கோளைச் செலுத்த தயாராகிறது வடகொரியா

செயற்கைக்கோளைச் செலுத்த தயாராகிறது வடகொரியா

1 mins read

வடகொரியா புதிய செயற்கைக் கோள் ஒன்றை விண்ணில் செலுத்த ஆயத்தமாகி வருகிறது என்று தென்கொரிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அணுவாயுத, ஏவுகணைச் சோதனைகளை மேற்கொண்ட தால் வடகொரியா மீது ஏராள மான பொருளியல், வர்த்தகத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஏவுகணைத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி செயற் கைக்கோள் உட்பட எதையும் ஏவக்கூடாது என்றும் அந்நாடு மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குவாங்மை யோங்சோங்=5 எனும் புதிய செயற்கைக்கோள் ஒன்றை வட கொரியா உருவாக்கியுள்ளது என்று தென்கொரிய அரசாங்கத் தகவல்கள் கூறுவதாக ஜூகங் இல்போ நாளிதழ் செய்தி வெளி யிட்டுள்ளது. "படக்கருவிகள், தொலைத் தொடர்புச் சாதனங்கள் ஆகிய வற்றுடன் அந்தச் செயற்கைக் கோளை விண்ணில் ஏவி, சுற்றுப்பாதையில் நிலைநிறுத்து வதுதான் வடகொரியாவின் திட்டம்," என்று அந்தச் செய்தி கூறுகிறது. இப்போது வடகொரியாவின் நடவடிக்கைகளில் வித்தியாசமாக எதுவும் தோன்றவில்லை என்றார் தென்கொரிய ராணுவப் பேச்சாளர் ஒருவர். அதே நேரத்தில், செயற்கைக் கோள் எனும் போர்வையில் தொலைதூர ஏவுகணையை வடகொரியா சோதிக்கவுள்ளதா என்று தமது நாடு கண்காணித்து வருவதாகவும் அவர் சொன்னார்.