$381 பில்லியன் மின்கட்டணம்: அமெரிக்கப் பெண் அதிர்ச்சி

$381 பில்லியன் மின்கட்டணம்: அமெரிக்கப் பெண் அதிர்ச்சி

1 mins read

அமெரிக்கப் பெண் ஒருவருக்கு 284 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (S$381 பி.) மின்சாரக் கட்டணப் பட்டியல் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்தொகை, ஹங்கேரி, தென்னாப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளின் மொத்த தேசிய கடன் தொகையைவிட அதிகம் என்பது வியப்புக்குரிய தகவல். பென்சில்வேனியாவைச் சேர்ந்த வர் திருவாட்டி மேரி ஹோரொ மன்ஸ்கி, 58. இவர் கடந்த மாதத்தில் தமது வீட்டிற்கு எவ் வளவு மின்கட்டணம் வந்துள்ளது என்பதைக் காண்பதற்காக இணையத்தில் நுழைந்தார். மின்சாரக் கட்டணமாக 284 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் 'பெனெலக்' மின்விநியோக நிறுவனத்திற்குச் செலுத்தவேண் டும் என்பதைக் கண்டதும் திருவாட்டி மேரிக்குத் தூக்கிவாரிப் போட்டது.

"எனது கண்கள், முகத்தை விட்டுப் பிதுங்கி வெளியே வந்து எட்டிப் பார்ப்பதுபோல இருந்தன," என்றார் திருவாட்டி மேரி. அந்தத் தொகை முழுவதையும் 2018 நவம்பர் மாதத்திற்குள் செலுத்தவேண்டும் என்றும் முதல் தவணையாக இந்த டிசம்பரில் 28,156 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, உடனடியாக பெனெலக் மின்விநியோக நிறு வனத்தைத் தொடர்புகொண்டார் திருவாட்டி மேரியின் மகன்.