இந்தியத் தலைநகர் டெல்லி நேற்று முன்தினம் மீண்டும் காற்று மாசால் பாதிக்கப்பட்டது. தூசு மூட்டத்தோடு பனிமூட்டமும் சேர்ந்துகொண்டதால் எதிரில் யார் வருகிறார்கள் என்று கணிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருந்தது. சராசரி காற்றுத்தரத்தின் குறி யீடு 335ஆக இருந்தது. இந்தக் குறியீடு 300க்கு மேல் சென்றால் காற்றின் தரம் ஆக மோசம் என்று பொருள்படும். மேலும், கடந்த சில நாட்களாக பனிமூட்டம் வாட்டி வதைப்பதால் ஏராளமான ரயில்கள் ரத்து செய் யப்படுவதோடு பல ரயில்கள் தாம தமாகக் கிளம்பிச் செல்கின்றன. அதுமட்டுமின்றி எதிரே மங்க லாக இருப்பதால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதும் சம்ப வங்களும் நிகழ்ந்து வருகின்றன. டெல்லி நகரம் ஏற்கெனவே உலகின் ஆக மோசமான காற்று மாசுப் பகுதி என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
டெல்லி நிலவரம் இப்படி இருக் கையில், அதேபோன்ற காற்று மாசு இலங்கைத் தலைநகர் கொழும் புக்கும் நேரும் என்று இலங்கை மத்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை இயக்குநர் சஜீவா சமிகர என்பவர் தெரிவித்துள்ளார். "அதிக புகை வெளியேற்றத்தால் டெல்லி நகரம் பாதிக்கப்பட்டதைப் போல கொழும்பும் பாதிக்கப்படும். கட்டுமானப் பணிகளும் வாகனப் பெருக்கமுமே புகை வெளியேற்றத் துக்கு முக்கிய காரணங்கள். "நகரமயமாதல், தொழில்மய மாதல் ஆகியவற்றை இந்த நில வரங்கள் உணர்த்தியபோதிலும் இந்த மாசு எல்லாம் சேர்ந்து கொழும்பை டெல்லியாக மாற்றும் நாள் நெருங்கி வருகிறது. "சதுப்பு நிலங்களை மாற்றி அவற்றில் கட்டடங்களை எழுப்பு வதும் அதிக சுற்றுச்சூழல் பிரச்சி னைகளை ஏற்படுத்தும்.
"ஏற்கெனவே துறைமுக நகரத் திட்டத்தால் கொழும்பு அதிகம் மாசுபட்டு உள்ளது. புகை வெளி யேற்றத்துக்கு அடுத்து கடல் அரிப்பும் சுற்றுச்சூழலை பெரி தாகப் பாதித்து வருகிறது. மேம் பாட்டுத் திட்டங்களாக இருப்பினும் சுற்றுச்சூழலைக் காக்க நமது எதிர்ப்பை அங்கு தெரிவிக்க வேண்டியுள்ளது. "கடற்கரை பகுதிகளான வெள்ளவத்தை போன்றவை கடல் அரிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன," என்றார் அவர்.

