எமிரெட்ஸ் விமானங்கள் டுனீசியா நுழைய தற்காலிகத் தடை

எமிரெட்ஸ் விமானங்கள் டுனீசியா நுழைய தற்காலிகத் தடை

1 mins read

துபாய்: எமிரெட்ஸ் விமானங்களில் டுனீசியப் பெண்கள் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து எமிரெட்ஸ் விமானங்கள் டுனீசியாவில் சேவையாற்றுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது டுனீசிய அரசாங்கம். டுனீசியாவுக்கும் துபாய்க்கும் இடையிலான எமிரெட்ஸ் சேவைகள் நிறுத்தப்பட்டதால் டுனீசிய விமான நிலையத்தில் குழப்பம் நீடிப்பதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணத்திற்காக டுனீசியப் பெண்கள், எமிரெட்ஸ் விமானங்களில் பயணம் செய்வதற்கு தற்காலிகத் தடை விதித்துள்ளதாக ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகள் தெரிவித்துள்ளன. டுனீசியாவுக்கும் ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை.