வாஷிங்டன்: ஏவுகணை தயாரிப்பில் முக்கிய பங்காற்றி வரும் வடகொரிய அதிகாரிகள் இருவருக்கு அமெரிக்கா தடை களை விதித்துள்ளது. கிம் ஜோங்-சிக், ரி-யோங் சோல் ஆகிய இருவரும் வடகொரியா வின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டத்தில் "முக்கியத் தலைவர்கள்'' என அமெரிக்க நிதி அமைச்சு கூறுகிறது. ரி யோங்-சோல் வடகொரியாவின் முன்னாள் விமானப் படை தளபதியாவார்.
அமெரிக்காவின் புதிய தடைகளால், அந்த இரு அதிகாரிகளும் அமெரிக்காவில் எந்தப் பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது. அமெரிக்காவில் அவர்கள் ஏதேனும் சொத்து வைத்திருந்தால் அவை முடக் கப்படும். வடகொரியாவின் ஏவு கணைச் சோதனைகளின் போது, வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் அவ் விருவரும் இருந்ததை புகைப் படங்கள் காட்டின. வடகொரியா அண்மையில் மேற்கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனைக்குப் பதிலடியாக, கடந்த வெள்ளிக் கிழமையன்று அந்நாட்டின் மீது புதிய பொருளியல் தடைகளை ஐநா பாதுகாப்பு மன்றம் விதித்தது. அதனைத் தொடர்ந்து இந்த புதிய தடைகள் போர் நடவடிக்கையாகும் என்று வடகொரியா தெரிவித்தது.

