மரண தண்டனையிலிருந்து தப்பிய ஆஸ்திரேலிய மாது

மரண தண்டனையிலிருந்து தப்பிய ஆஸ்திரேலிய மாது

1 mins read

கோலாலம்பூர்: போதைப்பொருள் கடத்தியதான குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கிய ஆஸ்திரேலிய மாது ஒருவர் அக்குற்றச்சாட்டிலிருந்து நேற்று விடுவிக்கப்படார். இதன் மூலம் மரண தண்டனை பெறுவதிலிருந்து அவரத தப்பியுள்ளார். மரியா எல்விரா பிந்தோ என்ற ஆஸ்திரேலிய மாது 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் வைத்திருந்த ஒரு பைக்குள் 1.1 கிலோ கிரோம் 'ஐஸ்' போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

அந்தப் பைக்குள் போதைப் பொருளை யார் வைத்தார்கள் என்பதே தனக்குத் தெரியாது என்று மாது ஆரம்பித்திலிருந்தே கூறி வந்தார். நண்பர் ஒருவரைப் பார்க்க சீனாவுக்குச் சென்றிருந்தபோது இணைய மோசடிக் கும்பல் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அந்த மாது கூறியிருந்தார். அவரது பைக்குள் போதைப்பொருள் இருந்தது அவருக்குத் தெரியாது என்று அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்.