ஜகார்த்தா: இந்தோனீசியாவில் இந்த ஆண்டு போதைப்பொருள் விற்பனை செய்தவர்கள் அல்லது விநியோகம் செய்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 79 பேரை சட்ட அமலாக்க அதிகாரிகள் சுட்டுக் கொன்றதாக இந்தோனீசியாவின் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு அமைப்பு தெரிவித்தது. போதைப்பொருள் தொடர்பில் மொத்தம் 58,000 பேரை கைது செய்த போதிலும் 79 பேர் மட்டுமே சுட்டுக் கொல்லப் பட்டதாக அந்த அமைப்பின் தலைவர் புடி வாசிசோ செய்தி யாளர்களிடம் கூறினார். அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டபோது பிடிபட்ட சந்தேக நபர்களை கைது செய்ய முயன்றபோது அவர்களில் பலர் எந்தவித எதிர்ப்பையும் வெளிப் படுத்தாமல் சரண் அடைந்த தாகவும் அவர் கூறினார். சுட்டுக்கொல்லப்பட்ட 79 பேரில் 69 பேர் இந்தோனீசியர்கள் என்றும் மற்ற 10 பேர் வெளி நாட்டினர் என்றும் கூறப்பட்டது.
போதைப்பொருள் விற்பனை: 79 பேர் இந்தோனீசியாவில் சுட்டுக்கொலை
1 mins read

