சிரியாவில் சிறார்களை வெளியேற்றுவதில் சிரமம்

சிரியாவில் சிறார்களை வெளியேற்றுவதில் சிரமம்

1 mins read

டமாஸ்கஸ்: சிரியா தலைநகர் டமாஸ்கஸில் போராளிகள் வசம் உள்ள பகுதியில் சிக்கியுள்ள நோயுற்ற சிறார்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கை கடந்த இரு நாட்களாக தொடரும் நிலை யில் அவசர உதவி தேவைப் படுவோரை உடனடியாக வெளி யேற்றுவது சிரமமாக உள்ளது என்று மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். கடந்த இரு நாட்களில் நான்கு சிறுவர்கள் உட்பட 16 நோயாளிகள் போராளிகள் வசம் உள்ள கிழக்கு கோட்டா பகுதியிலிருந்து வெளி யேற்றப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் மேலும் 13 சிறார்கள் வெளியேற்றப்பட்டதாகக் கூறப் படுகிறது.

இருப்பினும் அவசர சிகிச்சை தேவைப்படும் சிறார்களைக் காப்பாற்றுவது சிரமமாக உள்ளது என்று மருத்துவர் ஒருவர் கூறிய தாக பிபிசி தகவல் தெரிவித்தது. கடும் நோய் மற்றும் ஊட்டச் சத்து குறைவால் பாதிக்கப்பட்ட பலர் இறந்துவிட்ட நிலையில் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு சிறுமியை அங்கிருந்து வெளி யேற்றுவதற்காக அச்சிறுமியின் வீட்டிற்குச் சென்ற உள்ளூர் அதிகாரிக்கு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. சில நாட்களுக்கு முன்பு அச்சிறுமி இறந்து விட்டதாக சிறுமியின் குடும்பத் தினர் கூறியதாக அந்த அதிகாரி கூறினார்.