கெய்ரோ: எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள ஒரு தேவாலயத்தினுள் நுழைந்த துப்பாக்கிக்காரர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் மூன்று போலிஸ்காரர்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர். ஹெல்வன் வட்டாரத்தில் உள்ள மார் மினா என்ற தேவாலயத்தின் நுழைவாயிலில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட இருவரில் ஒருவரை போலிசார் சுட்டுக் கொன்றனர். மற்றொருவர் போலிசாரிடம் பிடிபட்டதாக தொலைக்காட்சித் தகவல் தெரிவித்தது. அந்த தேவாலயத்தைச் சுற்றி சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலிசார், அப்பகுதியில் காணப்பட்ட இரு சந்தேக நபர்களை அணுகியபோது அவ்விருவரும் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதாகவும் அதில் 9 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயம் அடைந்ததாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
எகிப்திய தேவாலயத்தில் தாக்குதல்; போலிஸ்காரர்கள் உட்பட 9 பேர் பலி
1 mins read

