மணிலாவில் தவறுதலாக இருவர் சுட்டுக்கொலை

மணிலாவில் தவறுதலாக இருவர் சுட்டுக்கொலை

1 mins read

மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் துப்பாக்கிக்காரர்கள் என்று நினைத்து இருவரை தவறுதலாக போலிசார் சுட்டுக்கொன்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மணிலா புறநகர் பகுதியில் வியாழக்கிழமை இரவு குடியிருப்பாளர்களிடம் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தின்போது சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக புகார் வந்ததைத் தொடர்ந்து போலிசார் அங்கு சென்றனர். அப்போது ஒரு வாகனம் அங்கிருந்து வேகமாகச் சென்றபோது அதில் துப்பாக்கிக்காரர்கள் இருப்பதாக நினைத்து போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். குடியிருப்பாளர்களுக்கிடையே மூண்ட சண்டையில் காயமடைந்த ஒரு பெண்ணை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது எதிர்பாராத அந்த விபரீதம் ஏற்பட்டதாக அந்த அதிகாரி கூறினார்.